கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பரவி வரும் ஆபத்தான நோய்
இலங்கையில் கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சி நோயொன்று ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது Multi system inflammatory syndrome யுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோயாக பரவி வருவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின் சில குழந்தைகள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாட்டின் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காய்ச்சலால் ஏற்படுவதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதாகவும் கண்கள் சிவத்தல், நாக்கு சிவத்தல் மற்றும் சருமத்தில் சிவப்பு நிற தழும்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றதுடன், இந்த நோய் மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தையும் பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நோய் பரவுகை ஆபத்தான சூழ்நிலை என்ற போதும் இந்த நோய் சிறுவர்களுக்கு மத்தியில் இனங்காணப்பட்டாலும், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதியவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam