கேகாலையில் ஆபத்தான கொரோனா வைரஸா? அதிகமாக பாதிக்கப்படும் தொற்றாளர்கள்
கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா ஆபத்து தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கேகாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பெரும்பான்மையானோருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் அதிகமாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் பெரும்பான்மையினருக்கு அதிக காய்ச்சல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமை நாட்டின் ஏனைய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளிடம் காணப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டினுள் கொரோனா வைரஸின் புதிய மரபணு உருவாகி வருவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு கேகாலை பிரதேசத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் வைரஸ் மாதிரியை பரிசோதிப்பதற்காக ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பாணியை பெறுவதற்காக கேகாலை பிரதேசத்திற்கு வந்த நபர்களிடம் இந்த வைரஸ் பரவியதா என்பது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
