இலங்கையில் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
கொழும்பு வாழ் இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான இரசாயன பாலுறவு அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டி ஆரச்சி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஆங்கில ஊடமொன்றுக்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, எச்ஐவி தொற்றாளர் அதிகரிப்பு என்பவற்றுக்கு மத்தியில் தற்போது இரசாயன பாலுறவு என்ற புது அச்சுறுத்தலுக்கு இளைஞர்கள் உள்ளாகியுள்ளனர்.
மதுபானம் மற்றும் சில போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இரசாயன பாலுறவு தற்போது இலங்கையிலும் பிரபலமாகி, பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அபாயத்தை உயர்த்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,