எதிர்வரும் 3 வாரங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
எதிர்வரும் 3 வாரங்களின் பின்னர் இலங்கையினுள் பரவும் முதன் கோவிட் மாறுபாடாக ஒமிக்ரோன் காணப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது சுகாதார பரிசோதகர் உப்புல் ரோஹன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 3 ஒமிக்ரோன் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னர். அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 7 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் பரவல் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்திய பொது சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மிகவும் ஆபத்தான நிலைமை நாட்டினுள் ஏற்படுவதனை தடுப்பதற்கு புத்தாண்டு காலத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் உப்புல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
