கொழும்பில் பெண்ணின் செயலால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஏற்படவிருந்த ஆபத்து
கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணிக்கும் அரை சொகுசு ரயில் இயக்கப்படும் முறை தொடர்பில் மருதானை ரயில் நிலைய அறிவிப்பாளர் வெளியிட்ட தகவல் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டாவது நடைமேடைக்கு வந்த ரயில் நீர்கொழும்புக்கு புறப்படும். நீர்கொழும்பு வரை ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தப்படும்” என ரயில் நிலைய பெண் ஊழியரின் அறிவிப்பு வெளியானது.
குறித்த அறிவிப்பிற்கமைய, தெமட்டகொடயில் இருந்து ராகம வரையிலான ரயில் நிலையங்கள் ஊடாக பயணிகள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர்.
ரயில் பயணத்தைத் தொடங்கத் தயாரான நிலையில் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். இரண்டாவது நடைமேடைக்கு வந்த ரயில் தெமட்டகொட மற்றும் களனி வரை நிறுத்தப்படும் என்றும் களனியிலிருந்து ராகம வரை நிறுத்தப்படாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புறப்பட்ட ரயில் மீண்டும் நிறுத்தப்பட்டது. களனியை அடுத்து ஹொரபே வரையிலான ரயில் நிலையங்களினூடாக பயண வசதி பெறும் பயணிகள், முன்னோக்கிச் நகர்ந்து சென்று ரயிலில் இருந்து மிகவும் சிரமத்துடன் குதிக்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொறுப்பற்ற பணிப்பெண்ணால் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.




