NPPக்கு பெரும் ஆபத்தாக போகும் முக்கிய பதவி : களத்தில் இறங்குவாரா அநுர!
இலங்கையில் 6ஆம் தர ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய இணையதள முகவரி பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாடப்புத்தகத்தில் தவறுதலாக அச்சிடப்பட்ட இணையதள முகவரி மாணவர்களுக்குப் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததால், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அதனை உடனடியாக முடக்கியுள்ளது.
இந்தத் தவறுக்காகப் பிரதமர் ஹரினி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை நீக்க வேண்டும் என செய்திகள் வெளியாகி வருகின்றது.
கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தரப்பினர் திட்டமிட்டு செய்த ‘சதி நடவடிக்கையாக’ இது இருக்கலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதமர் ஹரினிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri