வடக்கு - கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் காணிகள் ஆபத்தில்
புலம்பெயர் மக்களின் காணிகள் ஆபத்தில் இருப்பதாக யாழ். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்களின் பல காணிகள், வடமாராட்சி, வலிகாமம் மற்றும் தீவகப் பிரதேசங்களில் காணப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த காணிகளை சுவீகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாக மாணிக்கவாசகர் இளம்பிறையன் கூறியுள்ளார்.
இது ஒரு வகையில் புலம்பெயர் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதை தடுக்கும் பொறிமுறை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் தமிழ் இனத்தின் அடர்த்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
