ரஷ்ய விமானத்தால் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து - அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
கடந்த 2ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரஷ்ய ஏர்லோப்லொட் விமானமொன்று தடுத்து வைக்கப்பட்டது. அயர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக நீதிமன்றம், குறித்த விமானத்தை இலங்கையில் தடுத்து வைக்குமாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கான வர்த்தக விமான சேவையை இடைநிறுத்த ரஷ்ய ஏர்லோப்லொட் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, ஏர்லோப்லொட் விமானத்தை இலங்கை அதிகாரிகள் தடுத்து வைத்தமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவருக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலாத் துறைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு
இந்த விவகாரம் சுற்றுலா மற்றும் தேயிலை ஏற்றுமதிக்கு இடையூறாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையால் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். நாட்டிற்கு அதிகமாக ரஷ்ய சுற்றுலா பயணிகளே வருகைத்தருவார்கள்.
இவ்வாறான நிலையில் ரஷ்ய விமானத்தை தடுத்து இவ்வாறான தீர்மானம் எடுத்தால் நாட்டிற்கு எந்த அளவிற்கு ஆபத்துக்கள் உள்ளதென தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 12 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
