எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு ஆபத்து (Video)
இலங்கையில் பிரதான கோவிட் மாறுபாடான வைரஸ் ஒமிக்ரோன் எனவும், இந்த மாறுபாட்டின் புதிய பிறழ்வுகள் இரண்டு நாட்டில் பரவி வருவதாக மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
பரிசோதிக்கப்பட்ட 78 மாதிரிகளில் 75 மாதிரிகள் ஒமிக்ரோன் எனவும் இதுவரையில் நாட்டினுள் பரவிய டெல்டா மாறுபாடு 3 மாதிரிகள் மாத்திரமே காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் புதிய மாதிரிகள் ஏற்பட்டுள்ளன. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் இந்த ஒமிக்ரோன் மாறுபாடு நாடு முழுவதும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
AB.1 மற்றும் AB.2 என்ற இரண்டு பிறழ்வுகள் நாட்டில் வேகமாக பரவுவதனை அவதானிக்க முடிவதாக சந்திம ஜீவன்தர மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது எமது செய்திகளின் தொகுப்பு,
