மீண்டும் களத்தில் பசில் - கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இரட்டை பிரஜா உரிமை உள்ள ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியும் என்ற தீர்மானத்துக்கிணங்க பசில் ராஜபக்ச நிதியமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய பசில் ராஜபக்ச தற்போது மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்திரியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவே அவர் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது இவர் பொருளாதாரத்துறை அமைச்சராக முக்கிய அங்கம் வகித்துள்ளார்.
அதன்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார் என்று கூறப்பட்டிருந்தது.
இருந்தாலும் அதனைத் தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் அவர் நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குபெறவில்லை. சற்று அரசியலிலிருந்து விலகி இருந்ததைக் காணமுடிந்தது.
இது தொடர்பான மேலும் பல கடந்த வார அரசியல் செய்திகளை உள்ளடக்கி வருகிறது இவ்வாரத்திற்கான அரசியல் பார்வை,