கடலில் குளிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
கடலில் குளிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கப்பம் பெறும் பாதாள உலகக் கும்பல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தவிர வெளிநாட்டினரின் வாகனங்களை நிறுத்தி பணம் பறிப்பதும் தெரியவந்துள்ளது. பொருட்களை விற்பனை செய்யும் போது வெளிநாட்டவர்களிடம் இருந்து பல்வேறு நபர்கள் மிகப்பெரிய அளவில் பணம் வசூலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாதாள உலகக் கும்பல் மற்றும் பல்வேறு நபர்களை கைது செய்வதற்கு மோட்டார் சைக்கிள் பிரிவுகள் உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறித்த பிரிவின் அதிகாரிகள் தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் தென் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri