ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் அபாயம் - நிஷாந்தன் (Video)
இலங்கை மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜபக்ச ஆட்சியாளர்கள் தற்போது ரணில் ராஜபக்ச எனும் பெயரோடு அரசாங்கத்திற்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம்(12.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எதிர்காலங்களில் நடைபெறபோகும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றால் ராஜபக்சர்கள் பிரதமராக வரும் வாய்ப்பு அதிகளவில் காணப்படுகின்றது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறாது
இந்தநிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வர்த்தமானி இன்னும் 3 மாதங்களில் காலாவதியால் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தி்யக்கூறு இல்லை.
தன்னுடைய கட்சியை பலப்படுத்தவும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தேவையான வழிமுறையை தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகிறார்.
எதிர்கட்சிகள் தற்போதும் பல குரல்களை எழுப்பி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
இதேவேளை நாட்டில் அண்மைக்காலமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகிறார். ஆனால் வடக்கு கிழக்கு மற்றும் பல நாடுகளின் எதிர்ப்புக்களால் தற்போது அந்த சட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
