காணிகளுக்கான முழு அதிகாரம் கிடைக்கும் போது ஏற்படும் விபரீதம்! சுமந்திரன் எச்சரிக்கை

M A Sumanthiran Ranil Wickremesinghe Sri Lanka
By Dharu May 25, 2024 12:55 PM GMT
Report

அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணிக்கான முழு அதிகாரம் மக்களுக்கு கிடைக்கும்போது, அதனை ஈடுவைத்து அதனை இழக்க நேரிடலாம் எனவும், பல்தேசிய கம்பனிகள் வந்து இந்தக் காணிகளை வாங்கக் கூடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

“நீண்டகாலமாக காணி உரிமை இல்லாமல் இருந்த மக்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொலர் கையிருப்பு மற்றும் சம்பள அதிகரிப்பில் சாதகமான வளர்ச்சி

டொலர் கையிருப்பு மற்றும் சம்பள அதிகரிப்பில் சாதகமான வளர்ச்சி

காணிக்கான முழு அதிகாரம்

இந்தப் பணிகளை முன்னெடுத்த ஜனாதிபதிக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த காணி உரிமை உங்களுக்கு கொடுக்கும்போது எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. இதுவரை இவ்வாறு நிகழவில்லை.

காணிகளுக்கான முழு அதிகாரம் கிடைக்கும் போது ஏற்படும் விபரீதம்! சுமந்திரன் எச்சரிக்கை | Danger In The Lands Provided By Ranil

இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. இந்தக் காணிக்கான முழு அதிகாரம் உங்களுக்கு கிடைக்கும்போது, அதனை ஈடுவைத்து அதனை இழக்க நேரிடலாம். அதனை நீங்கள் விற்கக்கூடும். பல்தேசிய கம்பனிகள் வந்து இந்தக் காணிகளை வாங்கக் கூடும். நாட்டுப் பற்றுள்ள, மண் பற்றுள்ள நீங்கள், உங்கள் காணிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இந்தக் காணி உரிமையைப் போன்று அதிகாரப் பகிர்வு குறித்தும் குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வு என்று கோரிக்கை நீண்டகாலமாக மக்களின் அரசியல் அபிலாசையாக இருக்கிறது.

1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டது.

கொழும்பில் தேடப்படும் தமிழர் - தகவல் கொடுத்தால் இரண்டு மில்லியன் சன்மானம்

கொழும்பில் தேடப்படும் தமிழர் - தகவல் கொடுத்தால் இரண்டு மில்லியன் சன்மானம்

உயர் நீதிமன்ற தீர்ப்பு

அரசியலமைப்பில் இருந்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. காணி அதிகாரம் முழுமையாக மாகாண சபைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரச காணிகளைக் கொடுக்கப் போதும் மாகாண சபைகளில் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு அமையே வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணிகளுக்கான முழு அதிகாரம் கிடைக்கும் போது ஏற்படும் விபரீதம்! சுமந்திரன் எச்சரிக்கை | Danger In The Lands Provided By Ranil

எனினும், பின்னர் நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்ப்பில், கொடுக்கப்பட்ட அதிகாரம் பறித்தெடுக்கப்பட்டு மத்திய அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டது.

இன்று ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார்.

அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும், காணி அதிகாரம் கொடுக்கும் இந்த உறுதி வழங்கும் இந்த முயற்சிக்கும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.

அரச வரி வருவாயில் ஏற்பட்ட குறைவு : மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட சவால்மிக்க இலக்கு

அரச வரி வருவாயில் ஏற்பட்ட குறைவு : மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட சவால்மிக்க இலக்கு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US