பயணத்தடை தளர்த்தப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்து
கோவிட் தாக்கம் குறைவடைந்து பயணத்தடையில் தளா்வு ஏற்படுத்தப்பட்டமையை அடுத்து வாகன விபத்துக்கள் அதிகாித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளா் நிஹால் தல்துவ தொிவித்துள்ளாா்.
அண்மைக்காலத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களால் 9 போ் பலியாகினா். இதில் நேற்று மாத்திரம் 4 போ் பலியானதாக அவா் ஊடகங்களிடம் தொிவித்துள்ளாா்.
பலியான 9 போில் 4 பாதசாாிகளும் 2 உந்துருளி( மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா்கள்) செலுத்துநா்கள், 3 ஈருருளி( சைக்கிள் ஓட்டுநா்கள்) செலுத்துநா்களும் அடங்குவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தநிலையில் வாகனப் போக்குவரத்துக்கள் அதிகாித்துள்ள நிலையில் விபத்துக்களை தடுப்பதற்காக போக்குவரத்து சட்டங்களை கடுமையாகச் செயற்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின் பேச்சாளா் தொிவித்துள்ளாா்.