மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து : மக்கள் விசனம் (Video))
புதிய இணைப்பு
யாழ்ப்பாண பரமேஸ்வரா சந்தியில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பரமேஸ்வரா சந்திப் பகுதியில் தனியார் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தொடர்பில் இன்றைய தினம் அப்பகுதி மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவராக இருந்தாலும் சட்ட விரோதமான முறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில்
மருத்துவ கழிவுகள் எரிப்பதை அனுமதிக்க முடியாது. குறிப்பாக இது போன்ற
சம்பவங்கள் ஏற்கனவே இந்த பகுதியில் இடம் பெற்றுள்ளதாக இன்று எனக்கு அறியக்
கிடைத்துள்ளது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன் இது தொடர்பில் பொது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என நான் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் தனியார்
வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச்
சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் நீண்ட கால மருத்துவக் கழிவுகளே இப் பகுதியில் தீயிட்டு கொழுத்தப்படுவதாக மக்கள் செய்த முறைப்பாட்டின் பெயரில் மாநகர சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த சுகாதாரத் துறையினர் ஆதாரங்களைத் திரட்டியதோடு இது தொடர்பில் உடன் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த வைத்தியசாலைக்கு ஏற்கனவே பல தடவை அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் மீண்டும் இவ்வாறான ஒரு செயல் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உடனடியாக சுற்றுச் சூழலிற்கு பொறுப்பான பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அயலில் உள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில் பணம் செலுத்தி கழிவுகளை எரிப்பதற்கான பணத்தை மீதப்படுத்தும் நோக்கில் குறித்த தனியார் வைத்தியசாலை செய்த இழி செயலினால் சுற்றுப் புறத்தில் வாழும் நாம் நோயால் பாதிப்படைவதனை எவரும் கண்டுகொள்ளவில்லை.
சில சமயம் நாம் நோய்வாய்ப்பட்டால் தான் தமக்கு வருமானம் என எண்ணுகின்றனரோ தெரியவில்லை என்று பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.







நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
