டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என அறிவிப்பு
புதிய இணைப்பு
சமூக மற்றும் அரசியல் செயற்பட்டாளர் டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி டேன் பிரியசாத் உயிரிழந்து விட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் டேன் பிரியசாத் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
டேன் பிரியசாத் மீது நான்கு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் மீது சற்று முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
மீதொட்டுமுல்ல பிரதேசத்தின் லக்சந்த செவன எனப்படும் அடுக்குமாடிக் கட்டடத் தொகுதியில் பிரியசாத்துக்கு சொந்தமான வீட்டில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பலி
சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பிரியசாத் படுகாயமடைந்துள்ளதாக முன்னதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த பிரியசாத் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டேன் பிரியசாத் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளராக செயற்பட்டவர் என்பதுடன் நவ சிங்களே என்ற சிங்கள பௌத்த இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.