டேன் பிரியசாத் கொலை: அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள்
டேன் பிரியசாத் கொலை தொடர்பாக நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அடையாள அணிவகுப்பு இன்றையதினம்(09.05.2025) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கொலையை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள், சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான திசையில் வழக்கு
அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான வழக்கறிஞர், வழக்கு தவறான திசையில் செல்வதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்களுக்கு டேன் பிரியசாத்தின் கொலைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடையாள அணிவகுப்பு
அத்துடன், உண்மையான குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அடையாள அணிவகுப்பில் முன்னிலையான சாட்சிகளில் இருவர், இரண்டாவது சந்தேக நபரின் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபருக்கு நன்கு தெரிந்த உறவினர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவது சட்டப்பூர்வமானது அல்ல என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
