டேன் பிரியசாத் கொலையின் முக்கிய சந்தேக நபர் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Gun Shooting
By Vethu Apr 24, 2025 07:19 PM GMT
Report

டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான துலான் மதுஷங்க பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டேன் பிரியசாத்தின் சகோதரரை கொலை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் சமீபத்தில் வெல்லம்பிட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு புத்தாண்டு விழாவின் போது அவரை மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி டேன் பிரியசாத் என்ற நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா

பொலிஸ் விசாரணை

கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான துலான் மதுஷங்காவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவே பெரும்பாலும் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

டேன் பிரியசாத் கொலையின் முக்கிய சந்தேக நபர் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம் | Dan Priyasad Murder Suspect Revealed Secrets

அன்றைய தினம் டேன் பிரியசாத் ஒரு முச்சக்கர வண்டியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியிருந்தார், மேலும் அந்த முச்சக்கர வண்டி டானின் சகோதரனைக் கொலை செய்த சந்தேக நபர்களுடையது என்பது தெரியவந்துள்ளது.

தற்போதைய விசாரணைகளின்படி, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள துலான், தாக்குதலுக்குப் பிறகு டேன் பிரியசாத்தை கொல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

தற்போது டுபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கொலொன்னாவே தனுஷ்கவிடம் தாக்குதல் குறித்து அவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருந்தார். பின்னர் அவர் இந்த விடயம் பற்றி பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான காஞ்சிபாணி இம்ரானுக்குத் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யார் இந்த டேன் பிரியசாத்..! வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

யார் இந்த டேன் பிரியசாத்..! வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

கொலைக்கான காரணம்

முச்சக்கர வண்டி மீதான தாக்குதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, டேன் பிரியசாத்துக்கு 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். எனினும், அன்று அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகவில்லை.

டேன் பிரியசாத் கொலையின் முக்கிய சந்தேக நபர் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம் | Dan Priyasad Murder Suspect Revealed Secrets

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்த நேரத்தில் டேன்  பிரியசாத்தை கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அன்றைய தினம் டேன் பிரியசாத் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தராததால் அவரது மனைவியின் வீட்டிற்குச் சென்று அவரை கொல்லத் திட்டமிட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸார் கூறியுள்ளார்.

டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் உள்ளனர். அந்தக் குழுவில் டேன் பிரியசாத்தின் மனைவியின் சகோதரியும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள தந்தை மற்றும் மகன் இருவருக்கும் தொடர்பு இருப்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US