டேன் பிரியசாத்தின் படுகொலையில் சிக்கிய தந்தை மற்றும் மகன்!
அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரத்தில் தந்தை ஒருவரும் அவரது மகனும் ஈடுபட்டிருப்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டேன் பிரியசாத் படுகொலை சம்பவம் தொடர்பான தகவல்களை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வெல்லம்பிட்டிய பொலிஸார் சமர்ப்பித்தனர்.
வெளிநாடு செல்லத் தடை..
இதன்படி, டேன் பிரியசாத் படுகொலையில் தந்தையும் மகனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்துல பியால், மாதவ சுதர்ஷன என்ற தந்தை மற்றும் மகன் ஆகியோரே இந்தக் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கைகைளை ஏற்றுக் கொண்ட நீதவான், வெளிநாடு செல்வதற்கு சந்தேகநபர்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.