முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பம்.. டேன் பிரியசாத்தின் இனவெறி செயற்பாடுகள்..!
தமிழீழ விடுதலை புலிகளை நினைவுகூருவதாக கூறி, பொரளை கனத்த மயானத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது, டேன் பிரியசாத் உள்ளிட்ட குழுவினர் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் கொலன்னாவை நகரசபை வேட்பாளர் டேன் பிரியசாத் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவராக அடையாளப்படுத்தப்படும் டேன் பிரியசாத், ஒரு பாதாள உலக கும்பலின் பழிவாங்கலால் கொலை செய்யப்பட்டதாகவும் அதன் பின்னணியில் முக்கிய அரசியல்வாதிகளின் ஈடுபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பொரளை கனத்த மயானத்திற்கு முன்பாக சமூக ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் டேன் பிரியசாத் உள்ளிட்ட குழுவினர் குழப்பத்தை விளைவித்தாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்த செயற்பாட்டாளர்களில் ஒருவரான ராஜ்குமார் ரஜீவ்காந்த், அந்த சம்பவத்தின் போது டேன் பிரியசாத் நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து வந்து அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
இதன்போது, குறித்த குழுவினர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது, தமிழீழ விடுதலை புலிகளை நினைவுகூருவதாக கூறி அவர்களை தாக்க முற்பட்டதாகவும் மிக மோசமான இனவெறி கருத்துக்களை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பல முக்கிய விடயங்களை லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் வெளிப்படுத்திய பல முக்கிய தகவல்கள் பின்வரும் காணொளியில்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
