இறக்க முன் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட டேன் பிரியசாத்.. எழுந்துள்ள புதிய சர்ச்சை..
அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் இறப்பதற்கு முன்பு பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட தொடர் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள் சமூகத்தில் சந்தேகத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
டேன் பிரியசாத்தின் துப்பாக்கிசூடு தொடர்பில் முதல் அறிவிப்பு நேற்று இரவு 10.35 மணிக்கு வெளியிடப்பட்டது.
பொலிஸாரின் அறிவிப்புக்கள்
தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் டேன் பிரியசாத் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அதற்கு சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இரண்டாவது அறிவிப்பில், டேன் பிரியசாத் இன்னும் இறக்கவில்லை என்றும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக, இன்று காலை வெளியிடப்பட்ட மூன்றாவது அறிக்கையில், டேன் பிரியசாத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இறந்ததை பொலிஸ் திணைக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த முரண்பாடான மற்றும் தவறான அறிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் நிகழ்வுகள் குறித்து சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளன.
மேலும் ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை சரியாக பின்பற்றவும், தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் மக்களை வலியுறுத்துகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
