டான் பிரியசாத்தின் சகோதரன் படுகொலை விவகாரம்!நால்வர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது
சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத்தின் சகோதரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி வெல்லம்பிட்டிய ஒருகுடவத்த மேம்பாலத்தில் பிரகாஷ் திலின குமார் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை-மகன் கைது
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை-மகன் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடவத்த மற்றும் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் சந்தேகநபர்கள் கொலைக்காக வந்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் 3 கொலைகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
