தம்புள்ளையில் கோர விபத்து! இருவர் பலி - ஒருவர் படுகாயம்
தம்புள்ளை - குருநாகல் வீதியில் ரங்கிரி தம்புள்ளை விளையாட்டரங்குக்கு முன்பாக நேற்றுப் புதன்கிழமை(18) மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளமையுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சாரதியால் கவனயீனமாகச் செலுத்தப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்தபோது, எதிரே வந்த ஓட்டோ மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த இருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளமையுடன், அதில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வெடிக்கும் தொழிற்சங்கப் போராட்டம்! நாளை முடங்கப்போகும் அரச சேவைகள்