மோடியால் திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம் தொடர்பில் சர்ச்சை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படும் நிலையில் இல்லை என்று எதிர்க்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போதைய அரசாங்கம் குறித்த சேமிப்பு வளாகம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது.
சேமிப்பு வளாகத்தின் கட்டுமானப் பணிகள்
வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகத்தின் கட்டுமானப் பணிகள், 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது, தான் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சராகப் பதவி வகித்தபோது தொடங்கியது.
இருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது இந்த வளாகம் 5 ஆம் திகதி இணைய வழியில் திறக்கப்பட்டது” என கூறியுள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri