இயக்கச்சி பகுதியில் சேதமாக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞை
கிளிநொச்சி இயக்கச்சி சந்தியில் காணப்படும் வீதி சமிக்ஞை ஒன்று விபத்தின் காரணமாக பல நாட்களாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
பல நாட்களுக்கு முன்பு இயக்கச்சி சந்தி பகுதியில் காணப்படும் வீதி சமிக்ஞை ஒன்றின் மீது எதிர்பாரா விதமாக டிப்பர் வாகனம் மோதியது. சம்பவம் குறித்து பளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு பளை பொலிஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர்.
வீதி சமிக்ஞை
குறித்த வீதி சமிக்ஞை சேதமடைந்து காணப்படுவதாகவும் முன்னால் பாடசாலை காணப்படுவதால் இதனை கருத்தில் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அருகில் பாடசாலையை காட்டும் வீதி சமிக்ஞையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறித்த வீதி சமிக்ஞையை உரிய முறையில் மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |