மட்டக்களப்பில் மோசமான நிலையில் படகு பாதை: மக்கள் கவலை
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தையும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் இயந்திர படகு பாதை சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த இரு கிராமங்களையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக இந்த இயந்திர படகு பாதை காணப்படுகின்றது.
அத்துடன், நாளாந்தம் இந்த பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மேலங்கிகள் அணியாமல் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
உரிய தீர்வு
மேலும், பாதையின் தட்டி மற்றும் சங்கிலிகள் உக்கிய நிலையில் வெடித்து காணப்படுவதோடு அதை கட்டை ஒன்றில் கட்டியுள்ளனர்.
இந்நிலையில், விபத்து இடம்பெறாமல் இருக்க உரிய அதிகாரிகள் தமக்கான நிரந்தர பாலமொன்றை அமைத்துத் தருமாறு அம்பிளாந்துறை மற்றும் குருக்கள்மடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |