குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் விவசாய நிலங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பியிருந்த குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்க குளமாக உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காட்டு வெள்ளம் காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 31அடியாகக் காணப்படுவதன் காரணமாக குளத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வவுணதீவு பகுதியில் பெருமளவான வயல் நிலங்கள் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது வயல்கள் அறுவடை செய்யும் காலமாகவுள்ள நிலையில் இவ்வாறு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.









பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri