மெட்ரோ பேருந்துகளைச் சேதப்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை - பிமல் எச்சரிக்கை
மெட்ரோ பேருந்துகளைச் சேதப்படுத்தும் எவர் மீதும், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
இலங்கை மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்கு, சாரதிகள் அல்லது உரிமையாளர்கள் என யார் பொறுப்பாளராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர்களால்
ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், தற்போது சுமார் 100 மெட்ரோ பேருந்துகள் இயக்கத்தில் இருப்பதாகவும், பெரும்பாலான தனியார் பேருந்துகள் சேவைக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒரு சில பேருந்துகள் மட்டுமே சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இதைத் தனியார் பேருந்து உரிமையாளர்களால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாக நான் வகைப்படுத்த மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மெட்ரோ பேருந்து சேவை ஓராண்டுக்குள் தனியார் துறையின் பங்களிப்பிற்காகத் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.