திருகோணமலையில் ஆபத்தான நிலையில் பாடசாலை கட்டடங்கள்: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
திருகோணமலை - சேருநுவர சோமாதேவி வித்தியாலயத்தில் சில கட்டடங்கள் பாழடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் வகுப்பறைகளுக்குள் உள்ள எறும்பு புற்றுகளில் பாம்புகள் கூட தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சரிடம் கோரிக்கை
பாடசாலையில் சுமார் 300 மாணவர்கள் ஆபத்தில் இருப்பதாகவும், இது தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கவனம் செலுத்துமாறும் அவர் நாடாளுமன்ற உரையின் போது கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாழடைந்த கட்டடங்களைக் கொண்ட பாடசாலைகளில் இருந்து டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் மதிப்பீடுகளை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடத்திற்குள் அவற்றை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைகளை பிரயோகிக்கவே பயங்கரவாத தடைச் சட்டம்: சபையில் இரா.சாணக்கியன் சீற்றம் - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |