ஈழத்தில் உருவான புதிய திரைப்படம் : இலங்கை முழுவதும் இன்று முதல்
ஈழத்தில் உருவாகியுள்ள "டக் டிக் டோஸ்" திரைப்படம் கடந்த சிவராத்திரி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
குறித்த திரைப்படமானது இன்று (15.03.2024) முதல் இலங்கையின் ஏனைய பகுதிகளில் திரையிடப்படவுள்ளது.
"டக் டிக் டோஸ்" திரைப்படம்
அந்த வகையில் கொழும்பு PVR திரையரங்கில் மாலை 4.45 மணிக்கும் , கொழும்பு தெமட்டகொட றீகல் திரையரங்கில் காலை 10.15 மணிக்கும் , யாழ்ப்பாணம் றீகல் திரையரங்கில் மாலை 4 மணிக்கும், வவுனியா அமுதா திரையரங்கில் மாலை 06.30 மணிக்கும் கல்முனை GK திரையரங்கில் மாலை 06.30 மணிக்கும் கண்டி KCC திரையரங்கு , மருதானை சினிசிட்டி திரையரங்கில் இரவு 10.30 மணிக்கும் மற்றும் திருகோணமலை நெல்சன் திரையரங்கிலும் திரையிடப்படவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 17ஆம் திகதி சுவிஸ் Liestal மாநிலத்தில் உள்ள KINOORIS திரையரங்கில் மாலை 4.30 மணிக்கு திரைப்படவுள்ளது.
ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற "புத்தி கெட்ட மனிதரெல்லாம்" திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் "டக் டிக் டோஸ்" எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளமையால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் இலங்கையின் அனைத்து பக்கங்களிலும் உள்ள திரையரங்குகளில் திரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
