தினசரி மின்வெட்டு 14 மணிநேரமாக அதிகரிக்கப்படலாம்! வெளியானது அறிவிப்பு
தினசரி மின்வெட்டு நேரம் 14 மணி நேரமாக அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்த மின்வெட்டை 14 மணிநேரமாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை, திறைசேரிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிகக்ப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கும் மின்வெட்டு
நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு 320 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்களை திறக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்ததாக அவர் அங்கு குறிப்பிட்டார்.
எனினும் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் உரிய நிலக்கரி இருப்புக்களை கொள்வனவு செய்ய முடியாவிட்டாலும், நாளாந்த மின்வெட்டை 14 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்துள்ளது.