ரஜனிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய விருது
இந்திய திரைப்படத்துறை விருதுகளில் உயரிய விருதான “தாதா சாகேப்” விருது நடிகர் ரஜனிகாந்துக்கு (Rajinikanth) வழங்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (M. Venkaiah Naidu) இந்த விருதை வழங்கி வைத்துள்ளார்.
சினிமாவின் தந்தையான தாதா சாகேப்பின் நினைவாக, இந்த விருது வருடந்தோறும் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைப் புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த விருது அமிதாப்பச்சன் (Amitabh Bachchan) மற்றும் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிவாஜி கணேசனுக்கு பின்னர் தமிழ்த் திரையுலகில் எவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று விருதைப் பெற்றுக் கொண்ட நடிகர் ரஜனிகாந்த், விருதை தமது
குருவான கே.பாலசந்தருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri