உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் திருடர்களை விரட்ட முடியாது! இராஜாங்க அமைச்சர் ஹேரத் தெரிவிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்தை கவிழ்க்கவோ, அரசாங்கத்தில் உள்ள திருடர்களை விரட்டவோ முடியாது என இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஊருக்கு - கிராமத்துக்கு வேலை செய்யக்கூடியவர்களைத் தான் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
அனுபவம் உள்ள வேட்பாளர்கள்
வீதிகள் அமைப்பதற்கு - பாலங்கள் அமைப்பதற்குத் தலைமைத்துவம் வழங்கக்கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
இதற்காக வேலை செய்யக்கூடிய அனுபவம் உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்க வேண்டும்.
திருடர்களை விரட்டுவதற்கும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் நாம் ஒன்றிணைவோம் என்று கூறுகின்றது எதிர்க்கட்சி. அப்படி எதையும் செய்ய முடியாது.
அதற்காக அடுத்த பொதுத் தேர்தல் வரும். அதில் பார்த்துக் கொள்ளலாம். உள்ளூராட்சி சபைத் தேர்தல் அதற்கான ஒன்றல்ல.
ஊரில் சேவை செய்வதற்கான தேர்தலாகும்.
எல்லோரும் ஒன்றிணைந்து ஊரில் நன்கு வேலை செய்யக்கூடியவர்களைத் தெரிவு
செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
