அரசு ஒத்துழைத்தால் 3 வாரத்துக்குள் சிலிண்டர்களை விநியோகிக்க முடியும்! : லாப் நிறுவனத்தின் தலைவர்
"அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களை விடுவித்தமைக்கு கடன் உறுதிப்பற்று பத்திரங்களை அரசு பெற்றுத் தருவதாக இருந்தால் மூன்று வார காலத்துக்குள் முழு நாட்டுக்கும் பாதுகாப்பான சமையல் எரிவாயு கொள்கலன்களை எம்மால் விநியோகிக்க முடியும் என லாப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"லாப் ரக சமையல் எரிவாயு கொள்கலன்களை் சேகரிக்கப்பட்டு அதற்கு நீல நிறம் (லிட்ரோ ரக சமையல் எரிவாயுவின் நிறம்) பூசப்படும் செயற்பாடுகள் ஒரு சில பகுதிகளில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான செயற்பாடு குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளோம். நிற மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறு லிட்ரோ நிறுவனத் தலைவரிடம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் அது குறித்து அவர் கவனத்தில்கொள்ளவில்லை.
எரிவாயு கொள்வனவின்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் உலக சந்தையில்
எரிவாயுவின் விலை அதிகரிக்கும்போது விலைச்சூத்திரத்துக்கமைய தேசிய மட்டத்தில்
எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கடந்த மார்ச் மாதத்திலிருந்து
நுகர்வோர் அதிகார சபையிடம் வலியுறுத்தி வருகின்றோம். இருப்பினும் அதற்கு
இதுவரையில் அனுமதி கிடைக்கப் பெறவில்லை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri