மாண்டஸ் சூறாவளியால் இலங்கையில் பதிவான உயிரிழப்புகள்! அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்
தமிழகத்தின் மாண்டஸ் சூறாவளி (Cyclone Mandous) கரையை கடந்துள்ள நிலையில், அதன் காரணமாக இலங்கையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 13,000 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
தகவலின் படி பலாங்கொடை, மொரஹெல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கையின் வானிலை

அத்துடன் இலங்கையின் வானிலையை பொறுத்தவரை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் பெய்யும்.
அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை அலைகள் எழக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் கரையோர கடற்பரப்புகளில் அலைகள் 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்
கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam