நியூசிலாந்தில் சூறாவளி அபாயம்! அவசர நிலை பிரகடனம்
கப்ரியல் சூறாவளியின் மையம் தற்போது நியூசிலாந்திற்கு தெற்கே 910 மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சூறாவளி அபாயம் காரணமாக நியூசிலாந்தின் ஒக்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றம்
மேலும் நியூசிலாந்தின் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களில் குறிப்பிடத்தக்க புயல் எழுச்சியுடன் சேர்ந்து,மணிக்கு 133 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளி காரணமாக தொடர்ச்சியாக பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை கப்ரியல் என்ற 2 ஆம் வகை சூறாவளி நேற்று அவுஸ்திரேலியாவின் நோர்போக் தீவை மணிக்கு 140 கி.மீ வேகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.



