தீவிர புயலாக வலுவடையும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இதற்கு 'றீமால்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது குறித்த புயல் மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது.
தீவிர புயல்
இந்த நிலையில், றீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக இன்று மாலை வலுப்பெற்று நாளை (26.05.2024) நள்ளிரவு தீவிர புயலாக வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த மேற்கு வங்காள விரிகுடா கடற்கரையை கடக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கரையை கடக்கும் போது மணிக்கு 110 - 120 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.
இதேவேளை இலங்கையைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் நிலவும் கடும் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam
ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்த நபர்... இன்று பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைப்பு News Lankasri