தீவிரமடைந்துள்ள மொக்கா சூறாவளி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மொக்கா சூறாவளியானது தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடமேற்கு திசையை நோக்கி நகரவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
'மொக்கா' புயல் (14.05.2023) ஆம் திகதிக்குள் தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
வங்காள விரிகுடா
இந்த சூறாவளியானது அடுத்து வரும் 6 மணித்தியாலங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடாவின் மத்திய பிரதேசத்தை நோக்கி நகரும்.
இதன்பின்னர், படிப்படையாக திசையை மாற்றி நாளை மறுதினம் அளவில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியன்மாரை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை வீழ்ச்சி
இந்நிலையில் நாட்டில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு கூடுதல் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுகங்கை, களனி கங்கை, நில்வலா கங்கை மற்றும் கின் கங்கை என்பனவற்றின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த நீர்மட்ட உயர்வானது வெள்ள நிலைமையாக மாற்றமடையாது என நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் எஸ்.பீ.சீ சுகேஸ்வர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |