பல பகுதிகளில் அடைமழை - வெள்ளம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு மேல் கடுமையான மழை பெய்த போதிலும் வெள்ள அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு கூடுதல் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுகங்கை, களனி கங்கை, நில்வலா கங்கை மற்றும் கின் கங்கை என்பனவற்றின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த நீர்மட்ட உயர்வானது வெள்ள நிலைமையாக மாற்றமடையாது என நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் எஸ்.பீ.சீ சுகேஸ்வர தெரிவித்துள்ளார்.
இந்த கங்கைகளின் தாழ்நிலப் பகுதிகளில் நீர் மட்டம் உயர்வடைந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் அதிகளவில் தொடர்ச்சியாக மழை பெய்தால் வெள்ளம் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
