மண்ணுக்குள் புதைந்த வீடு! முழு கிராமமே அழிந்த அபாயம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியை பிரெட்டி புயல் பலமாக தாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மீட்பு பணிகள்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலாவி நாட்டை உலுக்கிய புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கிராமமே அழிந்துவிட்டது
பாதைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள ஒரு மலைக்கிராமத்தில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் அங்கிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இதில் சிக்கி 32 பேர் இறந்தனர். 18 பேரை காணவில்லை.
இந்த நிலச்சரிவால் அந்த கிராமமே அழிந்து விட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
