வரலாற்றில் முதல் முறையாக வடக்கு - கிழக்கிற்கு பேராபத்து
மிகப்பெரிய பேரனர்த்தத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளாகியிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
டிட்வா சூறாவளி தீவிரமடைவதால் இலங்கையில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புக்களையும் இழப்புக்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், செட்டிக்குளத்தின் அணைக்கட்டு உடைந்து வெள்ளநீர் பாய்ந்து வருவதாகவும் வரலாற்றில் முதல் முறையாக வடக்கு - கிழக்கிற்கு மிகப்பெரிய பேரனர்த்தம் ஏற்படவுள்ளதாகவும் பிரதீபராஜா குறிப்பிட்டார்.
அனர்த்தம் தொடர்பில் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பல தகவல்களை வழங்கியுள்ளார்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |