இந்தியாவைத் தாக்கிய அர்னாப் புயல்: 7 பேர் பலி - பலர் பாதிப்பு
வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவிற்குள் நுழைந்த அர்னாப் புயலின் தாக்கத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் புயல் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, 1,097 கிராமங்களில் உள்ள 830 குடும்பங்களைச் சேர்ந்த 59,028 பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை
அப்பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட மொத்த சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தின் மதிப்பு சுமார் 4,600 கோடி இந்திய ரூபாய் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று (30.10.2026)) பெய்த கனமழையின் காரணமாக, ஒடிசாவின் பஞ்சநகர் மாவட்டத்தில் உள்ள, கஞ்சம் மற்றும் கந்தமால் எல்லையில் அமைந்துள்ள கிடிபாபலி என்ற மலை கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
மொத்தம் 26 பேர் வசிக்கும் இந்தச் சிறிய கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர் என அப்பகுதி பேரிடர் மேலாண்மைப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மீட்புப் பணிகள்
மழைக்கு மத்தியில், 13 கிராமவாசிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் கிராமத்தில் இருந்த மற்ற 13 பேரில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டு நிவாரண முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
காணாமல் போன 12 பேரைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.