தேர்தல் பிரசார நடைமுறைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்
2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கு முன்பதாக கொட்கலை CLF கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், முக்கியஸ்த்தர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், தோட்டக்கமிட்டி ,மாவட்டத் தலைவர்கள், தலைவிமார்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இக்கலந்துரையாடலின் போது எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி குறித்து கலந்தரையாடப்பட்டுள்ளன.
2024 நாடாளுன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |