தமிழ் பொதுவேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு : வெளியான துண்டு பிரசுரம்!
புதிய இணைப்பு
நாளையதினம் தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கின்ற நிலையில் அதற்கிடையில் இதை நிலைகுலைப்பதற்காக சிலர் நான் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக துண்டுப்பிரசுரங்களை வெளியிடுகின்றனர் என தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்களித்து விட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அநாமதேய செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு நாளை வெளியாகவுள்ள முடிவு தக்க பாடத்தை புகட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
முதலாம் இணைப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மட்டகளப்பிலுள்ள அம்பலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் அரியநேத்திரன் தமது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
தேவையற்ற அசம்பாவிதங்கள்
இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் வாக்களித்து விட்டு அனைவரும் அமைதியான முறையிலே தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும்,தேர்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அசம்பாவிதங்களை மேற்கொள்ளாதிருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam