குறுகிய காலத்தில் இ.தொ.கா 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது: செந்தில் தொண்டமான் பெருமிதம்

Ceylon Workers Congress May Day Senthil Thondaman
By Dharu May 01, 2024 02:56 PM GMT
Report

கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க ஒத்துழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற்ற இ.தொ.காவின் மேதினக் கூட்டத்திலேயே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். இ.தொ.கா.வின் மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் எமக்கு கற்பித்ததும் அதுதான்.

எதிர்காலத்திலும் இ.தொ.கா சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கின்றனர்.


அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொட்டகலை நகரம்

அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொட்டகலை நகரம்

கூட்டத்தின் ஊடாக பதில்

உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுக்கொடுத்ததே காங்கிரஸ்தான் என அவர்களுக்கு கூறுகிறோம். கம்பனிகளுக்கு ஆதரவாக காங்கிரஸை ஊடங்களில் குறை சொல்கின்றனர்.

தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தாத கம்பனிகளுக்கு எதிராக ஒரு போராட்டத்தைகூட நடத்துவதில்லை இவர்கள். ஆனால், மக்களுக்காக போராடும் இ.தொ.காவுக்கு எதிராக இல்லாதக் கதைகளையும் கூறுகின்றனர்.

குறுகிய காலத்தில் இ.தொ.கா 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது: செந்தில் தொண்டமான் பெருமிதம் | Cwc Special Announcement

இது ஒரு நாகரீமாகிவிட்டது. அதற்கு இன்று இந்தக் கூட்டத்தின் ஊடாக பதில் அளிக்கிறோம். இ.தொ.காவால் மாத்திரம்தான் இலங்கையில் மூன்று நாட்களில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை கூட்ட முடியும்.

வெறும் மூன்று நாட்களில்தான் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். ஏனையவர்கள் மாதக்கணக்கில் நோட் புத்தகத்தை வைத்துக்கொண்டு கூட்டத்தை எங்கு செய்வதென திட்டம் வகுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இ.தொ.காவுக்கான கட்டமைப்பை எமது முன்னாள் தலைவர்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். 1948ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தருணத்தில் உரிமைகளற்ற சமுதாயமாக நாம் இந்த நாட்டில் இருந்தோம்.

இதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பலத்தின் ஊடாக போராடி இன்று இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு சமமாக படி படியாக உரிமைகள் பெற்ற சமூகமாக மலையக மக்களையும் மாற்றியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானாகும்.

அனைவரும் வரலாறுகளை மறந்துவிடுகின்றனர். தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் தந்தை செல்வா தமது கட்சி இரண்டாக பிளவுபட்ட போதும் மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்க அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் கைகோர்த்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இ.தொ.கா வின் மே தின நிகழ்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இ.தொ.கா வின் மே தின நிகழ்வு

குடியுரிமை மற்றும் வாக்குரிமை 

எவ்வாறு அனைவரது தியாகங்களுடனும்தான் இன்று நாம் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பெற்ற சமூகமாக மாறியுள்ளோம். அதன் பின்னர் அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் சௌமியமூர்த்தி தொண்டமான், கடமைகளை கையளித்திருந்தார்.

அந்தப் பொறுப்புகளை முழுமையாக முடிக்க முன் அவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும், சௌமியமூர்த்தி தொண்டமான், வழியில் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்த தலைவராக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார்.

குறுகிய காலத்தில் இ.தொ.கா 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது: செந்தில் தொண்டமான் பெருமிதம் | Cwc Special Announcement

குடியுரிமையை முழுமையாக எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது இவரது காலத்தில்தான். இன்று காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கலாம். காங்கிரஸ் என்ன செய்தது என நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் உங்களது தாத்தா பாட்டியை கேள்வி கேட்பதற்கு சமமானது.

உங்களது தந்தையை கேள்வி கேட்பதை போன்றது. இவர்கள் இணைந்து என்ன செய்தார்களோ அதனைதான் காங்கிரஸ் செய்தது. சம்பளத்தை காங்கிரஸ் வாங்கிக்கொடுக்காது என கூறினர்.

ஆனால், கடுமையான போராட்டத்தின் ஊடாக நாம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சரவையில் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கும் அரசாங்கத்துக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்தார்.

அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நாடாளுமன்றத்திலும் துறைசார் அமைச்சிலும் அழுத்தங்களை கொடுத்தார். பிரதி தலைவர்களான அனுசா சிவராஜாவும், கணபதி கணகராஜும் வாழ்வாதாரத்தை கணக்கிடுவதில் முன்னின்று செயல்பட்டனர்.

பிரதி தவிசாளர் மற்றும் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். பிரதி பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இந்தப் பணியை முன்னெடுத்தனர்.

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மே தின பேரணிகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மே தின பேரணிகள்

சம்பளப் பேச்சுவார்தை

இ.தொ.கா என்றால் மலையக மக்கள், மலையக மக்கள் என்றால், இ.தொ.கா. நாங்கள் வரும் வழியில் இ.தொ.காவின் சுவரொட்டிகளை சிலர் கிழித்திருந்தனர். எமது சுவரொட்டிகளை பார்த்தால்கூட பயமாகவா இருக்கிறது. இதனை பார்த்தால் எமக்கு புதிதாக இருக்கிறது.

இந்த சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு பல தொழிற்சங்கங்களும் பல சமூக அமைப்புகளும் உதவி செய்தன. இத்தருணத்தில் அவர்களுக்கு இ.தொ.கா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

குறுகிய காலத்தில் இ.தொ.கா 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது: செந்தில் தொண்டமான் பெருமிதம் | Cwc Special Announcement

எதிர்காலத்திலும் இ.தொ.கா முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்காது. அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் அதற்கு அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் அதற்கு அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் இ.தொ.காதான் பேசும்.

என்றைக்கும் இ.தொ.கா மாத்திரம்தான் பேசும். ஏனையவர்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் மாத்திரமே பேசுவார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறுகிய காலத்தில் அதாவது கடந்த மூன்று மாதங்களாகதான் இந்த பேச்சுகள் இடம்பெற்றுவந்தன. ஆகவே, இந்த குறுகிய காலத்தில் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்கியமைக்கான அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தருணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்ததை நினைவுக்கூறும் வகையில் முத்திரையொன்றை இ.தொ.கா முன்னிலையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் வெளியிட்டமைக்காக இந்த விசேட நன்றியை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருந்த தருணத்தில் 40 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசியையும் 100 மெட்ரிக்தொன் மருந்துகளையும், 500 மெட்ரிக்தொன் பால்மாவையும் வழங்கி மக்களுக்கு உதவியளித்திருந்தார்.

எவர் உதவி செய்தாலும் அவருக்கு நன்றியை கூறுவது இ.தொ.காவின் மான்பு. “போற்றுவார் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும்“ என்ற அடிப்படையில் எத்தருணத்திலும் எமது இலக்கில் இருந்து விடுபட மாட்டோம்.

இ.தொ.காவின் தலைவர் என்ற அடிப்படையில் கட்சியையும் மக்களாகியு உங்களையும் காப்பாற்றும் பணியில் ஒரு அடியேனும் பின்வைக்க மாட்டேன்.” என்றார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US