முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இ.தொ.கா. முக்கியஸ்தர்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பொன்றை மேற்கொண்டு அவரின் சுகநகலம் குறித்து விசாரித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்த பின்னர் பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்களும் அவரைச் சந்தித்து வருகின்றனர்.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
கார்ல்டன் இல்லம்
அதன் ஒரு கட்டமாக இ.தொ.கா. முக்கியஸ்தர்களும் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடிள்ளனர்.
இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



