தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்க தயார்! சி.வி.கே.சிவஞானம் அறிவிப்பு
அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்க தயார் என தமிழரசுக் கட்சியின் மூத்த துணை தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், என்னை பொறுத்தவரை நான் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை.

முரண்பாடு இல்லாத நிலை ஏற்பட்டு அனைவரும் ஏக மனதாக தெரிவு செய்வார்களாக இருந்தால், போட்டியில்லாது அனைவரினதும் ஒத்துழைப்போடும், இணக்கப்பாட்டோடும் தெரிவு செய்தால் அதை நான் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளேன்.
குறை சொல்லி பதவிக்கு வர விரும்பவில்லை
முரண்பாடு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால் அந்த கடமையினை செய்யக்கூடிய ஆற்றல் மற்றும் பொறுப்பு எனக்குள்ளது.
அதற்காக நான் யாரையும் குறை சொல்லியோ அல்லது யாருடைய கழுத்தை அறுத்தோ பதவிக்கு வர விரும்பவில்லை.

தலைமைக்கு தகுதியுடையவர் என என்னை பலர் சொல்கிறமை உண்மையாக இருந்தாலும் கூட எங்களுடைய கட்சி ஒற்றுமையாக போக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. அவ்வாறு இணக்கப்பாடு வந்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri