கருத்து வேறுபாடு இருந்தாலும் பலமாக இருக்கின்றது தமிழரசுக் கட்சி: சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, அதை நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம், எமது கட்சி பலமாக இருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எனினும், எமது கட்சி சுமூகமாக இயங்குகின்றது.
நீதித்துறைக்கு கட்டுப்படுவோம்
வழக்கு விசாரணையின் இறுதியில் நீதித்துறை என்ன சொன்னாலும் நாம் எல்லோரும் அதற்குக் கட்டுப்பட்டு இயங்குவோம்.

தமிழரசுக் கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதை நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். கட்சியை உடையாமல் பார்ப்பது என்னுடைய தனிப்பட்ட முயற்சி.
இதுவரை அதில் நான் வெற்றி கண்டிருக்கின்றேன் என்றுதான் நினைக்கின்றேன். வழக்கு முடிவடைகின்ற போது தீர்ப்பின்படி நாம் செயற்படுவோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. எமது கட்சி பலமாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |