கச்சதீவில் சில செயற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க இலங்கை இடம் கொடுத்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்
கச்சதீவில் சில செயற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க இலங்கை இடம் கொடுத்துள்ளதாக நான் அறிகின்றேன் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (29.06.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர் ஒருவர் கச்சதீவு விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கச்சதீவு விடயம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”கச்சதீவு விடயம் பல காலமாக பேசப்பட்டு வரும் விடயம். இது நாடுகளின் இறைமை சம்மந்தப்பட்ட விடயம்.
அவர்கள் கலந்துரையாடியே இதனை தீர்க்க வேண்டும்.
ஆனால்
கச்சதீவில் சில நடவடிக்கைகளில் இந்தியா இறங்குவதற்கு எமது நாடு
இடம்கொடுத்துள்ளதாக நான் அறிகின்றேன்.
ஆகவே அது தொடர்பான ஏதாவது ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
