கப்பம் வழங்க மறுத்த இளைஞனின் விரலை வெட்டிய சந்தேக நபர்கள்
கப்பம் வழங்க மறுத்த இளைஞனின் சுண்டு விரலை வெட்டி சம்பவம் ஒன்று தம்புள்ளை கண்டலம பிரதேசத்தில் நடந்துள்ளது. கண்டலம குளத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இளைஞனின் கைவிரலே இவ்வாறு வெட்டப்பட்டுள்ளது.
கொலை செய்ய போவதாக அச்சுறுத்திய சந்தேக நபர்கள்

சம்பவம் தொடர்பாக அதே குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைவிரல் வெட்டப்பட்ட இளைஞன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், கண்டலம குளக்கரைக்கு சென்று, இளைஞனை அச்சுறுத்தி அவரிடம் கப்பமாக பணத்தை கேட்டுள்ளனர். பணத்தை வழங்க மறுத்தால் மீன் வெட்டும் கத்தினால், வெட்டி கொலை செய்ய போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
அப்போது 500 ரூபாவை மாத்திரம் தர முடியும் என இளைஞன் கூறியுள்ளார். இதனையடுத்து இளைஞனின் கழுத்தை வெட்டி கொலை செய்ய சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.
ஒரு சந்தேக நபர் இளைஞனை பிடித்துக்கொண்டிருக்கும் போது மற்றைய சந்தேக நபர், இளைஞனின் விரலை துண்டாக வெட்டியுள்ளார். இதன் பின்னர், இளைஞனிடம் இருந்து 17 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அலைபேசி ஆகியவற்றை சந்தேக நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் பறித்துச் சென்ற அலைபேசி விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் அதனையும் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam